Oneindia - thatsTamil

2002 குஜராத் வன்முறை: அமித்ஷா பேட்டியை தொடர்ந்து அடுத்தடுத்து போலீஸ் பாய்ச்சல்- மாஜி டிஜிபி கைது!

Sun, 26 Jun 2022 07:29:09 +0530

அகமதாபாத்: 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறை வழக்குகளில் பிரதமர் மோடி விடுதலை செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து பிரதமர் மோடி விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் மற்றும் இவ்வழக்குக்கு ஆதரவாக இருந்த முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஶ்ரீகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில்

குஜராத் கலவரம்... பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் கைது

Sun, 26 Jun 2022 06:57:34 +0530

காந்திநகர்: குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டை அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடியான நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ராவில்

வெள்ளம்தான்.. அதற்காக.. சிவசேனா எம்எல்ஏக்கள் ஹோட்டலில் தங்ககூடாதா? அசால்டாக கேட்பது அசாம் முதல்வர்

Sat, 25 Jun 2022 18:17:28 +0530

கவுஹாத்தி: அசாமில் வெள்ளம் வந்தால் யாரும் நட்சத்திர விடுதிகளில் தங்கக்கூடாதா என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கேள்வி எழுப்பி இருக்கிறார். மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால்

தமிழிசை செளந்தரராஜன்: \"தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாமல் நிகழ்ச்சியா?\" - என்ன நடந்தது?

Sat, 25 Jun 2022 20:06:42 +0530

புதுச்சேரி ஜிப்மர் விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலின்றி தொடங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதே நிகழ்வின் நிறைவில் தமிழ்த்தாய் பாடலை ஒலிக்கச் செய்த அவர், இனி எல்லா நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.

தந்தை பெயரில் மகனை கவிழ்க்க திட்டம்.. அதிருப்தி எம்எல்ஏ குழுவுக்கு “சிவசேனா பாலாசாகேப்” எனப்பெயர்

Sat, 25 Jun 2022 17:00:20 +0530

கவுஹாத்தி: உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக அசாமில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்கள் குழுவிற்கு சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவின் பெயரை கொண்ட "சிவசேனா பாலாசாகேப்" என பெயரிட்டுள்ளார். மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. ஆனால் தேர்தலுக்கு

மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி கேட்கும் நவ்நீத் ராணா எம்.பி

Sat, 25 Jun 2022 20:06:56 +0530

மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியான மஹாவிகாஸ் அகாடி அரசாங்கம் கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கும் வேளையில், அந்த மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சனிக்கிழமை கோரியிருக்கிறார் அமராவதி தொகுதி சுயேச்சை எம்பி நவ்நீத் ராணா. "உத்தவ் தாக்கரேவை விட்டு வெளியேறி, சொந்தமாக முடிவெடுக்கும் எம்எல்ஏக்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்

இறந்தவர் உயிரோடு வந்த அதிசயம்.. பாகிஸ்தானின் நாடகம் அம்பலம் ”மும்பை தாக்குதல்” குற்றவாளி கைது

Sat, 25 Jun 2022 12:42:46 +0530

இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறப்பட்ட ஷாஜித் மிர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பையின் தாஜ் ஓட்டல், சிஎஸ்டி ரயில் நிலையம், டிரிடென்ட் ஓட்டல், காமா மருத்துவமனை என பல இடங்களில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தினர். சொந்த

லோன் வேணுமா லோனு..கணவரை பிரிந்த பெண்கள் தான் குறி! பக்கா ஸ்கெட்ச் போட்ட சேத்தன்! பதறிப் போன போலீஸ்!

Sat, 25 Jun 2022 11:56:33 +0530

போபால் : வங்கிக் கடன் தருவதாகக் கூறி கணவனை இழந்த மற்றும் கணவரை பிரிந்த பெண்களை குறிவைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த வங்கி மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிரா மாநிலம் போபாலைச் சேர்ந்தவரான குற்றம் சாட்டப்பட்ட சேத்தன் மக்வானா நியூ ராணிப் பகுதியில் வசித்து வருகிறார். இவர்

ஜெகன் அதிரடி! ஆந்திராவில் அம்பேத்கர் பெயரில் மாவட்டம்.. பெரும் எதிர்ப்பை மீறி பறந்து வந்த உத்தரவு!

Sat, 25 Jun 2022 17:35:10 +0530

விஜயவாடா: ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்திற்கு பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என்று பெயர்மாற்றம் செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திராவில் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோனசீமா என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவானது. அம்மாவட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சூட்ட வேண்டும்

பயம் காட்டும் கொரோனா! பள்ளிகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள்? அமைச்சர் அன்பில் மகேஷ் என்ன சொல்கிறார்?

Fri, 24 Jun 2022 16:21:32 +0530

செங்கல்பட்டு : கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளில் கட்டுபாடுகள் குறித்து இதுவரை, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை அவ்வாறு வந்தால் அதற்கு ஏற்றார்போல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழ் நாட்டில் 124

இவ்வளவு லட்சமா! பெரிய சொகுசு விடுதியில் மகாராஷ்டிரா எம்எல்ஏ-க்கள்.. ஒருநாள் எவ்வளவு செலவு தெரியுமா?

Fri, 24 Jun 2022 15:52:38 +0530

கவுகாத்தி: அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா கட்சி அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்காக நட்சத்திர விடுதி செய்யப்பட்டு வரும் செலவுகள் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் கூவத்தூர் ரிசார்ட் எந்த அளவுக்கு பிரபலமாகியதோ, அதேபோல் இப்போது அசாமில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டல் புகழ்பெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி

”நாங்களே வெள்ளத்தில் மிதக்குறோம்” சிவசேனா எம்எல்ஏக்களை விரட்டும் காங்கிரஸ்.. அரவணைக்கும் பாஜக அரசு

Fri, 24 Jun 2022 15:02:31 +0530

கவுஹாத்தி: அசாம் வெள்ளத்தில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அம்மாநில பாஜக அரசு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களை உபசரிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக அசாம் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. 2024 தேர்தலுக்குப்

பொம்மையுடன் திருமணம் ஓகே.. குழந்தை எப்படி? இணையத்தை குழம்ப வைத்த பிரேசில் பெண்!

Fri, 24 Jun 2022 13:14:00 +0530

பிரேசிலியா: பிரேசிலில் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொம்மையைத் திருமணம் செய்து கொண்ட பெண், தனக்கு குழந்தை பிறந்திருப்பதாகக் கூறி, விருந்து வைத்து கொண்டாடிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருட்கள் மீது கொண்ட தீராக்காதலால் குக்கரை, பொம்மையை திருமணம் செய்து கொண்டவர்கள் பற்றி அடிக்கடி செய்திகளில் பார்த்திருப்போம். ஒரு சிலர் பீட்சா, பர்கர் என சாப்பாட்டுப் பொருட்களைக்கூட திருமணம் செய்து

பெற்றோரின் செல்போன்களை ஹேக் செய்து ஆபாச படங்களை பதிவிட்ட சிறுவன்.. காரணத்தை கேட்டு ஷாக் ஆன போலீஸ்!

Fri, 24 Jun 2022 10:58:53 +0530

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு தம்பதியினர் தங்கள் செல்போன்களை யாரோ ஹேக் செய்துவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த தம்பதியரின் செல்போனை ஹேக் செய்ததே அவரது 13 வயது மகன் தான் எனத் தெரியவந்துள்ளது. முதலில் ஹேக்கர்கள் தன்னை மிரட்டி இப்படி செய்யச் சொன்னதாக கூறிய அந்தச் சிறுவன் பிறகு தானே, பெற்றோரை பிராங்க் செய்வதற்காக இப்படிச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான்.

குடியரசுத் தலைவர் தேர்தல்.. மண்ணின் மகளுக்கு ஆதரவில்லை.. முர்முவை எதிர்க்கும் ஒடிசா காங்.. விளக்கம்!

Fri, 24 Jun 2022 10:16:39 +0530

புவனேஷ்வர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் மண்ணின் மகளான திரெளபதி முர்முவை தாங்கள் ஏன் ஆதரிக்கவில்லை என்று ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவராக இப்போது ராம்நாத் கோவிந்த் உள்ளார். அவரது பதவிக்காலம் விரைவில் முடியவுள்ள நிலையில், வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல்

அம்மா வயசு இருக்கும்..கட்டுமான தளத்தில் கதறிய மூதாட்டி! கொஞ்சமும் இரங்காத கொடூரன்! பதறிப் போன போலீஸ்

Fri, 24 Jun 2022 12:04:56 +0530

போபால் : மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே கட்டுமான தளத்தில் பணியாற்றி வந்த 48 வயதான பெண்ணை 28 வயது இளைஞர் கடத்திச் சென்றதோடு அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 2020ஆம் ஆண்டைக் காட்டிலும், 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில், பெண்கள் குறிப்பாக 18 வயதுக்கு

10,12 வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெறலாம் - டவுன்லோடு செய்வது எப்படி?

Fri, 24 Jun 2022 09:53:49 +0530

சென்னை : தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு

விடா ”புடின்” - உக்ரைனுக்கு ”வேட்பாளர்” அந்தஸ்து.. ரஷியாவுக்கு செக் வைக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

Thu, 23 Jun 2022 23:51:45 +0530

கீவ்: ரஷியாவின் தொடர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக அந்நாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் முடிவுசெய்திருக்கின்றனர். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைனில் படையெடுப்பை தொடங்கிய ரஷியா, இடைவிடாமல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருப்பினும் உக்ரைன் விட்டுக்கொடுத்துவிடாமல் நட்பு நாடுகளின் உதவியோடு ரஷியாவுடன் மோதி

”பாகிஸ்தானை” வீழ்த்திய “தேசிய கட்சி” நமக்கு உதவும் - சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களிடம் ஏக்நாத் உறுதி

Thu, 23 Jun 2022 22:51:26 +0530

கவுஹாத்தி: பாகிஸ்தானை வீழ்த்திய தேசிய கட்சி தங்களுக்கு உதவ முன்வந்திருப்பதாகவும், ஆதரவு அளிப்பதாக உறுதியளித்திருப்பதாகவும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களிடம் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. புதிய ட்விஸ்ட்! சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு செக்..

தமிழகத்தை உதயநிதி தான் ஆளப்போகிறார்.. ஓப்பனாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!

Thu, 23 Jun 2022 16:48:33 +0530

மயிலாடுதுறை: வரும் காலத்தில் தமிழ்நாட்டை உதயநிதி ஸ்டாலின் தான் ஆட்சி செய்யப் போகிறார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பூம்புகார் தொகுதி எம்எல்ஏ-வும் மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற

குஜராத் டூ அஸ்ஸாம்...அடுத்து கோவா போகும் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள்- பாஜகவுடன் புதிய ஆட்சி?

Thu, 23 Jun 2022 15:26:23 +0530

குவஹாத்தி: மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் புயலை கிளப்பிவிட்டிருக்கும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கோவா மாநிலத்தில் முகாமிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென சிவசேனா கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே 42

100 பேர் பலி.. அசாம் வெள்ளத்தை விட சிவசேனா ஆட்சியை கவிழ்ப்பது தான் மோடிக்கு முக்கியம்! காங் சுளீர்

Thu, 23 Jun 2022 15:20:50 +0530

கவுஹாத்தி: அசாமில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு 100 பேர் பலியான நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கண்டுகொள்ளாமல் மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் என காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. அசாமில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல்வராக உள்ளார். இந்நிலையில் அசாம் மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மகாராஷ்டிரா ஆளுநருக்கு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கடிதம் - இனி என்ன நடக்கும்?

Wed, 22 Jun 2022 19:53:27 +0530

கவுஹாத்தி: மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 34 பேர் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர். மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.

அடுத்த அதிரடி.. உத்தவ் தாக்ரே சரியில்லை.. கட்சி கொள்கையே போச்சு.. 34 சிவசேனா எம்எல்ஏக்கள் தீர்மானம்

Wed, 22 Jun 2022 16:51:54 +0530

குவஹாத்தி: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசில் ஊழல் அதிகரித்துள்ளது; அதிகாரத்துக்காக சிவசேனாவின் அடிப்படை கொள்கைகளை நீர்த்து போக செய்து சமரசம் செய்துவிட்டார் உத்தவ் தாக்கரே என சரமாரியாக குற்றம்சாட்டி அதிருப்தி எம்.எல்.ஏக்க்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அமைச்சர்

அதிகரிக்கும் பலாத்கார சம்பவங்களால் அவசரநிலை அமல்.. பாகிஸ்தான் பஞ்சாப் மகாண அரசின் பகீர் முடிவு

Wed, 22 Jun 2022 16:06:55 +0530

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பஞ்சாப் மகாணத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் அங்கு ‛அவசரநிலை' பிரகடனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பஞ்சாப் மகாண முதல்அமைச்சராக ஷம்சா ஷாபாஸ் உள்ளார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியை சேர்ந்த இவர் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மகன் ஆவார். பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சியை

மதுவை வாயில் ஊற்றி.. இருட்டில் நீண்ட கைகள்! ஆண்டனியான ஆட்டோக்காரர்! மயங்கி சரிந்த பெண், பதறிய போலீஸ்

Wed, 22 Jun 2022 16:59:31 +0530

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானின் உதய்பூரில் ஒதுக்குப்புற இடத்தில் 25 வயது பெண் நான்கு ஆண்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது.  ஜாபர் சேட்டிடம் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி! 4

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உயிரிழப்பு 920ஆக உயர்வு.. 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Wed, 22 Jun 2022 16:26:41 +0530

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கையைத் தாலிபான் அமைச்சர் பகிர்ந்துள்ளார். இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 எனப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாகப் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

ஒடிஷா: சிவன் கோவிலை சுத்தம் செய்து நந்தியை ஆரத்தழுவி வணங்கிய பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு!

Wed, 22 Jun 2022 10:40:25 +0530

புவனேஸ்வர்: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒடிஷா பழங்குடி இன தலைவர் திரெளபதி முர்மு இன்று சிவாலயத்தை சுத்தம் செய்து வழிபாடு நடத்தினார். நாட்டின் புதிய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள்

ஹோட்டலுக்கு வந்த அந்த \"புள்ளி\".. முடக்கப்படும் சிவசேனா கட்சி சின்னம்? மகாராஷ்டிராவில் பெரிய ட்விஸ்ட்

Wed, 22 Jun 2022 08:16:25 +0530

கவுகாத்தி: நேற்று குஜராத்தில் தங்கி இருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிவசேனா சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் முடக்க போவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. மகாராஷ்டிரா அரசியலில் உச்ச கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு சிவசேனா- காங்கிரஸ் - தேசியவாத

குஜராத் ரிஸ்க்.. சிவசேனா எம்எல்ஏக்களை அசாம் அழைத்து செல்ல ரெடியாகும் பாஜக - ஏன் தெரியுமா?

Wed, 22 Jun 2022 10:23:35 +0530

அகமதாபாத்: குஜராத் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏக்களை அசாமுக்கு இடமாற்றம் செய்ய பாஜக ஆயத்தமாகி வருகிறது. மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. 13 இல்ல... 33 - குஜராத் ஹோட்டலில் உள்ள மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள்franceindia.com